2026 ஜனவரி 21, புதன்கிழமை

கர்ப்பிணிகளுக்கு உணவுப் பொதிகள் கையளிப்பு

Kogilavani   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அப்துல் கலாம் ஞாபகார்த்த அறக்கட்டளை மற்றும் நலன்புரி அமப்பினால், கண்டி, மஹய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு, அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு, மஹய்யாவ சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் (4) நடைபெற்றது.

கொழும்பைச் சேர்ந்த வர்த்தகப் பிரமுகர்களான ஏ.ஜி.எச்.இஸ்மாயில், எஸ்.எச்.எம்.ஜிப்ரி, ஏ.எம்.நதீம்;, திருமதி ராபியா பேகம், திருமதி சுமையா பேகம் ஆகியோரின் அனுசரணையில், இந்த உணவுப்பொருட்கள் கையளிக்கப்பட்டன.

சுமார் ஒரு இலட்ச ரூபாய் மொத்த பெறுமதியில், பொருட்கள் கையளிக்கப்பட்டன.

அப்துல் கலாம் ஞாபகார்த்த அறக்கட்டளை மற்றும் நலன்புரி அமப்பின் தலைவர் என்.கருனாகரன் இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X