2024 செப்டெம்பர் 14, சனிக்கிழமை

கொல்லனின் கோமியமும் , கொத்தமலை கோமியமும்

Editorial   / 2024 ஜூலை 29 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோபுரத்தில் வேலை செய்து கொண்டிருப்பவன் கீழே சிறுநீர் கழிக்க இறங்கி வந்து போக முடியாது. அதனால் அங்கேயே சிறுநீர் கழித்து விடுவான். இதைப்போல ஒரு பழமொழியாக கொல்லனின் கோமியம் கோபுரத்தில் என்பார்கள்.

ஆனால், ​கொத்மலை பிரதேசத்தில், இரண்டொரு போத்தல்களில் சிறுநீர் பிடிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலைகளுக்கு பலரும் பல பரிசோதனைகளுக்கு செல்வர், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் குறைவிருக்காது. வரும் வயோதிபர்களுக்கு கூறப்படும் அறிவுரைகள் சரியாக விளங்குவதில்லை. அதனால், பல்வேறு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

சிறுநீர் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுவதாக கூறி வைத்தியரை சந்திக்க சென்றுள்ளார் . நோயாளியை பரிசோதித்த பின்னர் வைத்தியரால் நோயாளிக்கு மருந்து வழங்கப்பட்டடு ஒரு வாரத்திற்குப் பிறகு சிறுநீர் மாதிரியைக் கொண்டு வந்து மீண்டும் பரிசோதிக்குமாறு வைத்தியர் கூறியுள்ளார் .

எனினும், ஒரு வாரம் வெளியேற்றிய சிறுநீரை இரண்டு மெகா பிளாஸ்டிக் போத்தல்களில் நிரப்பி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.  போத்தல்கள் என்ன இருக்கின்றது என்று விசாரித்த போதே, விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

சிறுநீர் பரிசோதனைக்கு சிறுநீர் மாதிரியை ஒரு வாரம் கழித்து கொண்டு வருமாறு வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார். எனினும், சம்பந்தப்பட்ட நோயாளி ஒரு வாரம் வெளியேற்றிய சிறுநீரை கொண்டுவந்துள்ளார்.

நல்ல நேரம் இரண்டு மெகா போத்தல்களும் திறக்கவில்லை. திறந்திருந்தால் மூக்கை அடைத்தே இருக்க வேண்டும் என் அங்கிருந்தவர்கள் முணுமுணுத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .