Kogilavani / 2016 மார்ச் 18 , மு.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
இந்திய அரசியல் அமைப்பின் முன்னோடியும் பிரபல பொருளியல் மற்றும் அரசறிவியல் விற்பன்னருமான கலாநிதி பீ.ஆர்.அம்பேத்கரின் 125ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, கண்டி உதவி இந்திய தூதுவராலயம் கட்டுரைப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
15-25 வயது பிரிவு, 26-35 வயது பிரிவு என இரண்டு பிரிவுகளில் நடைபெறவுள்ள இக்கட்டுரைப் போட்டியில் இலங்கையர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும்... என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அரசியல் அமைப்பும் அது தொடர்பிலான தற்போதைய சூழ்நிலையும்... என்ற தலைப்பில், இரண்டு பிரிவினரும் தங்களுடைய கட்டுரைகளை அனுப்பி வைக்க முடியும் என, உதவி இந்திய தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் சுமார் 500 சொற்களுக்குக் குறையாதவாறு கட்டுரைகள் அமைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் மூன்று மொழிகளில், முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். மொத்தம் 18 பேர் இதன்போது தெரிவு செய்யப்படவுள்ளனர். முறையே மூன்று மொழிகளிலும் இரண்டு பிரிவிலும் மொத்தம் ஆறு முதலிடங்களும் ஆறு இரண்டாம் இடங்களும் ஆறு மூன்றாம் இடங்களும் தெரிவு செய்யப்படும்.
முதலாம் இடங்களுக்கு தலா 7,500 ரூபாய் வீதம் 6 பரிசுகளும் இரண்டாம் இடத்துக்கு தலா 5,000 ரூபாய் வீதம் 6 பரிசுகளும் மூன்றாம் இடங்களுக்கு தலா 2,500 ரூபாய் வீதம் 6 பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. இந்த அடிப்படையில் மொத்தம் ஓர் இலட்சம் ரூபாய் பெறுமதியான பரிசுகள் 18 போட்டியாளர்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படவுள்ளதுடன் அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
கட்டுரைகளை, தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மார்ச் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. கட்டுரைகளை, திருமதி பிரங்யாசிங். (இணைப்பு பி.ஐ.சி.), உதவி இந்தியத் தூதுவராலயம், 31, ரஜபிஹில்ல மாவத்தை, கண்டி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோர்ப்பட்டுள்ளனர்.
20 minute ago
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
35 minute ago
50 minute ago