Janu / 2024 பெப்ரவரி 01 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை, மீதும்பிடியவில் ஏற்பட்ட மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் விஜயமொன்றை புதன்கிழமை (31) மேற்கொண்டுள்ளார்.
இதன்போது மண் சரிவினால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டவர்களுக்குரிய காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குரிய நிறை குறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மீதும்பிடிய A பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 78 குடும்பங்களுக்கும் ஸ்ரீ கணேஷா பாடசாலைக்கு அருகிலும் 96Cயில் பாதிக்கப்பட்ட 32 குடும்பங்களுக்கும் டெமேரியா A மூன்றாம் இலக்கப் பகுதியிலும் ஹொப்டன் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 145 குடும்பங்களுக்கும் முதலாம் இலக்க மலையிலும் காணி ஒதுக்கீடு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

4 minute ago
18 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
18 minute ago
56 minute ago
1 hours ago