Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 டிசெம்பர் 29 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
ஹட்டன்- டிக்கோயா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்குச் சொந்தமான காணியை அபகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து டிக்கோயா தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை புதன்கிழமை (28) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் காணி, தனி நபரொருவரினால் அபகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட பகுதிக்கு, நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் குழந்தை வேல் அழைக்கப்பட்டார்.
அபகரிக்கப்பட்ட அந்த காணி தொடர்பில் கோரிக்கையொன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டது. அதனையடுத்து ஆலயத்தின் காணியில் குவிக்கப்பட்டிருந்த கற்களை அகற்ற தவிசாளர் ரவி குழந்தைவேல் நடவடிக்கையை எடுத்திருந்தார்.
கற்கள் அகற்றப்பட்ட பின்னர், அவ்விடத்தில் தேர்வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் நிறுத்தி வைத்தனர்.
இது தொடர்பில், நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தைவேல் கருத்து தெரிவிக்கையில், குறித்த காணியானது நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட அதிகார பிரதேசத்தில் உள்ளது. அக்காணி தொடர்பில் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைக்கு அமைய ஆலயத்தின் காணியை சட்டவிரோதமான முறையில் அபகரித்தைமை தொடர்பில் பிரதேச சபை ஊடாக, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .