2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கழிவு தேயிலை வைத்திருந்தவருக்கு பொலிஸ் பிணை

Sudharshini   / 2016 ஜூன் 13 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

ஹட்டனிலிருந்து கடுகண்ணாவைப் பிரதேசத்துக்கு அனுமதிப்பத்திரம் இன்றி, சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட  379 கிலோகிராம் கழிவுத் தேயிலையை, கடுகண்ணாவை பொலிஸார்; ஞாயிற்றுக்கிழமை  (12) மாலை   கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபரையும் கைதுசெய்துள்ளனர்.

இந்த கழிவு தூள், பிலிமத்ததலாவை மற்றும் கெலிஓயாப்  பகுதிகளில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளதெனப் பொலிஸார்; தெரிவித்தனர்;.

கைதுசெய்யப்பட்ட சந்தேக  நபர்;, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும் கம்பளை உதவித் தேயிலை ஆணையாளரின் அறிக்கையை பெற்ற பின்னரே, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .