Kogilavani / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}



எம்.கிருஸ்ணா
நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர் மின் உற்பத்தி நிலையத்துக்கு நீர் வழங்கும் காசல்ரி நீர்த்தேக்கத்திலுள்ள கழிவுகளை அகற்றும் வேலைத்திட்டம், இன்று (1) முன்னெடுக்கப்பட்டது.
நோர்வூட் பிரதேச சபை, அம்பகமுவ பிரதேச செயலகம், இலங்கை மின்சார சபை, காசல்ரி நன்நீர் மீன் வளர்ப்புச் சங்கம் உட்பட பலர் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்தனர்.
காசல்ரி நீர்த்தேக்கத்துடன் இணையும் பொகவந்தலாவை கெசல்கமுவ ஓயா, ஹட்டன் ஓயா ஆகிய பகுதிகளில் வீசப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் உள்ளிட்ட
கழிவுகள், நீர்த்தேக்க கரையோரப் பகுதிகளில் அதிகளவில் காணப்பட்ட நிலையிலேயே, நீர்த்தேக்கத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026