2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

காணாமல் போன சுற்றுலா குழுவினர் மீட்பு

Kogilavani   / 2021 மார்ச் 29 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாஹிஸ்

பம்பரகந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதற்காக வந்து காணாமல் போன 11 பேர் அடங்கிய சுற்றுலா பயணிகள், பொலிஸார் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  

மேற்படி நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பு கல்கிஸ்ஸைப் பகுதியில் இருந்து  நேற்று முன்தினம் (28) வருகைத்தந்த குழுவினர்,  ஹல்தமுல்ல கலுபான பகுதிக்குச் சென்றிருந்த நிலையில், வழிமாறி காட்டுப் பகுதிக்குப் பயணித்து விட்டனர்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்த ஹல்துமுல்ல பொலிஸார், அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் காணமல் போனோரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

சுமார் இரண்டு மணித்தியால தேடலுக்குப் பின்னர் காணமல்போன 11 பேரும் கண்டுபிடிக்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று, ஹல்தமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X