Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 டிசெம்பர் 16 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை மாவட்ட ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலைகளின் காணி தொடர்பான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு பெறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பதுளை மாவட்ட அபிவிருத்தி சங்க கூட்டம் நடைபெற்ற போது மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளை பெற்று பதுளை பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் திகழ்கின்றார்கள்.
இருந்தபோதிலும் பதுளை மாவட்ட பாடசாலைகளில் தொடர்ந்தும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது குறிப்பாக விஞ்ஞானம் கணிதம் போன்ற முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் குறைந்த அளவில் காணப்படுவதினால் மாணவர்கள் தங்களுடைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அசௌகரிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள ரோபெரி தமிழ் வித்தியாலயம் ஸ்ப்ரிங்வெலி மேமலை , பண்டாரவளை லியங்காவலை பாடசாலைகளுக்கும் காணி பெற்றுக் கொள்வதில் இழுபறிநிலை காணப்படுவதையும் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சேர்த்தேன்
அதற்கு பதில் அளிக்கும் முகமாக ஜனாதிபதி அவர்கள் ஊவா மாகாண ஆளுநர் மற்றும் சிரேஷ்ட செயலாளருக்கும் உடனடியாக மேற்குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு காணிகளை வழங்கி கட்டிடங்களை நிர்மானிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் எதிர்ப்பலைகள் வந்தாலும் அதிகாரிகள் தங்களுடைய கடமைகளை சரிவர செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார் ..
பாடசாலை காணிகள் தொடர்பில் நீண்ட காலமாக இழுப்பறி நிலையில் இருந்த பிரச்சனைக்கு முடிவு எட்டப்பட்டுள்ளதாகவே நான் காண்கின்றேன் என்றார். R
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago