2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

கால்நடைகளுக்கு இடையில் கால்வாய் நோய் பரவும் அபாயம்

மொஹொமட் ஆஸிக்   / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்துக்குள் கால்நடைகளையும் இறைச்சிகளையும் முறையற்ற விதத்தில் கொண்டுசெல்வதால், கால்நடைகளுக்கு கால்வாய் நோய் பரவுவதாகவும் எனவே, விவசாயிகள் அனைவரும் அவதானமாக இருக்கவேண்டும் என, மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.பீ.கே ராஜநாயக்க தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் அதிகளவு பரவி வரும் இந்த நோய்  தொடர்பாக, நேற்று (24), வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கண்டி மாவட்டத்தில், பூஜாபிட்டிய அக்குறணை, பாத்ததும்றை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில், மாடுகளுக்கு இடையில் இந்நோய் பரவி வருவதாகவும் தமது மாடுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு, விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

மாடுகள் மந்த நிலையில் இருப்பது, தீன் உண்ணாமல் இருப்பது, கால்கள், வாய்களில் புண் ஏற்படுதல், வாயில் நு​ரை வடிதல் போன்ற நோயின் அறிகுறிகளாக இருப்பதாகவும் இவ்வாறான அறிகுறிகள் தமது கால்நடைகளுக்குக் காணப்பட்டால், உடனடியாக கால்நடை வைத்தியர் ஒருவரின் உதவியை நாடுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் வளர்க்கப்படும் அனைத்து மாடுகளையும் பதிவு செய்து, அவற்றுக்கு இலக்கம் ஒன்று வழங்கப்படவுள்ளதாகவும் மாடுகளுக்கு அதன் விவரம் அடங்கிய கோவையொன்று வழங்கப்படடுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், நோய்கள் பரவாமல் இருப்பதற்கு, அவற்றுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை ஊசி ஏற்றிவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .