2025 மே 19, திங்கட்கிழமை

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 26 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

ஹைபொரஸ்ட்  -பிரேம்லி தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த  பத்து நாட்களாக வீட்டில் இருந்து காணாமற் போயிருந்த 56 வயதுடைய கருப்பையா சரோஜா என்பவரே, நேற்று (25) மாலை சடலமாக மீட்கப்பட்டதாக ஹைபொரஸ்ட் பொலிஸார்  தெரிவித்தனர்.

இவர் காணாமல் போன விடயம் தொடர்பில், ஹைபொரஸ்ட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பெண்ணின்  வீட்டுக்கு அருகிலிருக்கும் விவசாய காணியில் அமைக்கப்பட்டுள்ள ஆழமான கினற்றிலிருந்து  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வலப்பனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.மோகனராஜன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, மரண விசாரணையை மேற்கொண்டதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X