R.Maheshwary / 2022 ஏப்ரல் 24 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை பகுதியில், மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால், அந்த வீதியுடனான போக்குவரத்து, ஒரு வழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (23) மாலை தொடக்கம் அப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், கினிகத்தேனை நகரம் மற்றும் கினிகத்தேனை பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில், இன்று அதிகாலை இந்த மண்மேடு சரிந்து விழுந்ததாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
சரிந்து விழுந்துள்ள மண்மேடு மற்றும் கற்களை அகற்றும் பணிகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணியாளர்கள் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
18 Jan 2026