2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

கிராம அபிவிருத்தி கூட்டத்தில் அபிவிருத்தி சங்கங்களுக்கு அழைப்பில்லை

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 டி.சந்ரு

நானுஓயா -கிரிமெட்டி கிராம சேவகர் பிரிவில்  கிராம அபிவிருத்தி தொடர்பாக 

நடத்தப்பட்ட அபிருத்திக் கூட்டத்துக்கு, கிராமஅபிவிருத்தி சங்கங்களுக்கு அழைப்பு இல்லையென, நுவரெலியா பிரதேச செயலாளருக்கு இப்பிரதேசத்திலுள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள் முறைப்பாடு செய்துள்ளன.

   நானுஓயா கிரிமெட்டி 476 A கிராம சேவகர் பிரிவில்,  "வெடசமக யலி கமட"   என்ற அரசாங்கத்தின் வேலைத் திட்டத்துக்கு  30 இலட்சம் ரூபாய் நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது. 

 இதில் சுய தொழில் செய்பவர்களுக்கு கோழி வளர்ப்பு , காளான் வளர்ப்பு, கிராம வீதி அபிவிருத்தி, குடிநீர் உட்பட பாடசாலை கட்டிட அபிருத்திகளுக்கு அரசாங்கத்தால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நேற்று  (27)   டெஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தில் நடத்தப்பட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு, கிராம சேவகருக்கும்  அபிவிருத்தி உத்தியோகஸ்தருக்கும் தேவையானவர்களை மாத்திரம் அழைத்து, அபிவிருத்தி கூட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X