Kogilavani / 2021 மார்ச் 24 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
கொட்டகலை பிரதேச சபை நிர்வாக பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில், 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, கொட்டகலை சுகாதார அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இவர்களில் ஆறு பேர் தலவாக்கலை பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி அறுவரும், கொட்டக்கலை பிரதேச பாடசாலையொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்கு இரவு நேர வகுப்புக்கு சென்றுள்ளனர்.
இந்த ஆசிரியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அவருடன் தொடர்பை பேணியவர்கள் என்ற முறையில், மேற்படி அறுவர் உட்பட பலருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் இன்று (24) வெளியானபோதே எழுவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களது குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026