Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 22 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
இம் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் ஆரம்பித்து, 15 தினங்களில் சிவனொளிபாதமலை அடிவாரம் முதல் உச்சி வரை உள்ள பகுதிகளில் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றது.
சிவனொளிபாதமலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் சுற்றாடல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக இது சிவனொளிபாதமலைக்குப் பொறுப்பான பெங்கமு தம்மதின்ன தேரர், தெரிவித்துள்ளதுடன், ஆரம்ப காலத்தில் சகல அதிகாரிகளையும் ஒன்றிணைத்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
அதற்கமைய, சிவனொளிபாதமலைக்கு வரும் யாத்திரிகர்கள், தமது எதிர்கால சந்ததிக்காக அபூர்வமாக இருக்கும் இந்த மலையப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, மலை உச்சியில் இருந்து அடிவாரம் வரை உள்ள பகுதிகளில் குப்பைகளை வீசி எறிய வேண்டாம் எனவும் தரிசனம் செய்ய வரும் யாத்திரிகர்கள் மலைக்கு வரும் போது பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் குப்பைகள் போன்றவற்றை எடுத்து வர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை அறிவுறுத்தும் வகையில் குறித்த பகுதியில் பதாகைகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .