Kogilavani / 2021 மார்ச் 24 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில், குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதால், தாம் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள், தமது பயிர்ச்செய்கைகளுக்கு சேதம் விளைவிப்பதாகவும் இதனால் தமது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். .
மஸ்கெலியா, நல்லதண்ணி, நோட்டன், கினிகத்தேனை, லக்ஷபான, கிரிவன்னெல்ல, அம்பகமுவ ஆகிய பகுதிகளிலேயே, குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே, குரங்குகளைப் பிடித்து வன பகுதியில் கொண்டுவிடுவதற்கு, சம்பந்தப்பட்டத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026