Editorial / 2018 டிசெம்பர் 24 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், எஸ்.கணேசன், ஸ்ரீ சண்முகநாதன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காகக் கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள், அதிலிருந்து வெளியேற வேண்டுமென்று தெரிவித்த மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், சகலதரப்பினரும் இணைந்து, ஒரு கூரையின் கீழ் கலந்துரையாடி, அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
அதைவிடுத்து, தான்தோன்றித் தனமாகச் செயற்பட்டு, மக்களை ஏமாற்ற முயலக்கூடாது என்றும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில், தேவையேற்படின், தற்போது தான் வகித்து வரும் அமைச்சுப் பதவியையும் துறக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய புதிய அரசாங்கத்தில், மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சைப் பெற்றுக்கொண்டமைக்காக, அமைச்சர் திகாம்பரத்துக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு, ஹட்டன் நகரில் நேற்று (23) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசமைப்புக்கு விரோதமாகச் செயற்பட்டு, புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முயற்சித்த போதும் அது கைகூடவில்லை என்று சுட்டிக்காட்டியதுடன், ஜனநாயகக் கட்சிகள் இணைந்து, நீதிமன்றத்தை நாடி, இந்த அரசாங்கத்தைக் கைப்பற்றியுள்ளதாகவும் கூறினார்.
தான், 6 கோடி ரூபாய் முதல் 7 கோடி ரூபாய் வரையிலான தொகைக்கு, பேரம் பேசப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், எனினும் தான் வசித்த லயத்தின் இரண்டு பக்கக்கோடிகளை மறந்துவிடவில்லை என்றும் அதனாலேயே, தான் விலைபோகவில்லை என்றும் தெரிவித்தார்.
அரசியல் குழப்பநிலையால் ஏற்பட்ட அபிவிருத்தி இடைநிறுத்தங்கள் யாவும் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.



4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026