Kogilavani / 2021 மார்ச் 25 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ்
காசல்ரி நீர்த்தேக்கத்துடன் இணையும் பொகவந்தலாவை கெசல்கமுவ ஓயாவில், கழிவு தேயிலை நீர் கலப்பதால், ஆற்று நீர் மாசடைந்துள்ளதாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பொகவந்தலாவைப் பகுதியிலுள்ள தேயிலைத் தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியாகும் கழிவு நீரே இவ்வாறு கெசல்கமுவ ஓயாவில் கலந்துள்ளது.
கரையோரம் வாழும் மக்கள், தமது அன்றாடத் தேவைகளுக்காக குறித்த ஆற்று நீரைப் பயன்படுத்துகின்ற நிலையில், இவ்வாறு கழிவு நீர் கலப்பதால் பல்வேறு அசௌரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் காசல்ரி நீரத்தேக்கத்தில் கலக்கும் இந்தக் கழிவு நீரினால், நீர்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று, காசல்ரி நன்நீர் மீன் வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.சுமார் 100 குடும்பங்கள் வரை காசல்ரி நீர்த்தேக்கத்தில் நன்நீர் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் பொதுவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் வினவிய போது, கழிவு நீர் ஆற்றுக்கு திருப்பிவிட்டப்பட்டுள்ளமைத் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026