Editorial / 2025 ஜனவரி 19 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.
கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாட்டுக் சந்தியில் சனிக்கிழமை (18) இரவு 10.20 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கவலைக்கிடமான நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி பகுதியில் இருந்து ,கொழும்பு பகுதியை நோக்கி ஒரே திசையில் பயணித்த வான் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
வேக கட்டுப்பாட்டை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் முன்பாக சென்ற வேனை முந்தி செல்ல முயன்ற நிலையில் வேனுடன் பலமாக மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது சைக்கிளை செலுத்தி சென்ற நபருக்கு கால் ஒன்று உடைந்தது தெரிவிக்கப்பட்டுள்ளது,விபத்து தொடர்பான விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
30 minute ago
43 minute ago
52 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
43 minute ago
52 minute ago
59 minute ago