2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்

Kogilavani   / 2021 ஏப்ரல் 01 , மு.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா  

இளம் தாயொருவர், தனது கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்துள்ள நிலையில், குழந்தை மரணமடைந்துள்ளதுடன் குறித்த பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, மஹியங்கனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே, இவ்வாறு தனது கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தனதுயிரை மாய்துக்கொள்ள முயன்றுள்ளார் என்று தெரியவருகிறது.

இச்சம்பவத்தில் ஒன்றறை வயதான ஆண் குழந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

குறித்த பெண்,  குழந்தையுடன் கிணற்றில் குதிப்பதைக் கண்ட அயலவர்கள் உடனடியாக கிணற்றில் குதித்து மேற்படி இருவரையும் மீட்டுள்ளப் போதிலும் குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பெண் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X