2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கைதான மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 22 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

பேராதனை பல்கலைக்கழக சட்டபீட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் நேற்று  (21) மாலை கைதுசெய்யப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த நான்கு மாணவர்கள் மீது, இந்த மாதம் 14ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது, இரண்டு மாணவிகள் உள்ளிட்ட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான மாணவர்களின் வாக்குமூலத்துக்கு அமைய, சட்டபீடத்தின் 3 மாணவர்கள் வகுப்புத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், நேற்று  மாலை அவர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரு தரப்பினரையும் எதிர்வரும் நாட்களில் மத்தியஸ்த சபையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X