2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

‘கொடுத்து விட்டு வாங்கும் அரசாங்கம்’

எம். செல்வராஜா   / 2020 மே 18 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் - 19  நிவாரண நிதியென்று, 5,000 ரூபாய் நிதி வழங்கப்பட்டு மறுகையில், அதை மீளப் பெறும் சூட்சுமமான திட்டமொன்றை, அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரின் உத்தியோகப்பூர்வ அலுவலக மண்டபத்தில், இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கொவிட்-19 நெருக்கடியின் ஆரம்பத்தில் விலை குறைக்கப்பட்ட சில பொருள்களின் விலைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, பெருந்தோட்டப் பகுதிகளில், இதன் விலை மேலும் அதிகரிக்கப்பட்டே விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார்.

இந்நிலையில், கொவிட்-19 நிதியுதவியாக 5,000 ரூபாயை வழங்கிவிட்டு, அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை அதிகரித்து, அந்த 5,000 ரூபாயை மீண்டும் மீளப்பெரும் நடவடிக்கையையே, அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, 5,000 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், முதலாம் கட்டமாக வழங்கப்பட்ட 5,000 ரூபாய் நிவாரண நிதியே, முழுமையாக பூர்த்தியடையாத நிலையில், இரண்டாம் கட்டமாக வழங்கும் நிதியிலும் ஊழல், முரண்பாடுகள் இடம்பெற்று வருவதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .