Editorial / 2017 ஜூலை 10 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
வெலிமடை, திக்காபிடிய பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 50,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைககள் மற்றும் ஒன்பது இலட்சம் ரூபாய் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்ற 18 வயது இளைஞனை, சீசீடிவி கமெராவின் உதவியுடன் கைதுசெய்துள்ளதாக, வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிமடை, கொடவெர பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே, நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வீட்டின் உரிமையாளர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சீசீடிவி கமெராவின் உதவியுடன் குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளனர்.
இவ்விளைஞனிடமிருந்து 80ஆயிரம் ரூபாய் பணத்தையும், ஏற்கெனவே, திருடி வைத்திருந்ததாக கூறப்படும் 10 அலைபேசிகளையும் மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago