R.Maheshwary / 2022 மார்ச் 24 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உறுப்பினரான ஈசன், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வித்தியாசமான முறையில் தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.
அண்மையில், ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில், யாசகம் செய்து தனிமனித எதிர்ப்பை வெளியிட்டிருந்த குறித்த உறுப்பினர், இன்று பசறை பிரதேச சபைக்கு எதிராக மொட்டையடித்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், புண்ணாக்கையும் சமைக்கப்படாத இறைலையும் உண்டு அரசாங்கத்துக்கான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் நாடு மொட்டை அடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை உணர்த்தும் வகையிலேயே தான் மொட்டையடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026