2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

’கோட்டாவின் முயற்சியால் பயங்கரவாதமற்ற அரசாங்கம் உருவாகியுள்ளது’

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதமற்ற அரசாங்கத்தை உருவாக்குவதற்கு,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட தரப்பினரால் முடிந்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக, இரண்டாம் நிலைத் தயார்படுத்தலுக்கான நடவடிக்கைகள் தறபோது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வறுமையை தூரமாக்கும் வேலைத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஒரு இலட்சம் பேரைக்கொண்ட சேவை அணி ஒன்று உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு, அதிக வாய்ப்பு கிடைக்குமென்றும் சாதாரணத் தரம், உயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

தேர்தல் காலத்தில், பசை வாளியை கையில் எடுத்து சுவரொட்டி ஒட்டியவர்களுக்கு, தகுதி பார்த்து வேலை வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்குவதற்கு தேவையான அமைச்சரவைப் பத்திரம் தன்னால் கொண்டு வரப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த அவர், வாழ்வாதார பொருளாதார முறைமை கொண்டுவரப்படும் வரை, அவர்கள் அரசியல்வாதிகளின் கைபொம்மைகளாகவே இருப்பர் என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .