2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கோவில் நிகழ்வுகளை நடத்த 12 நிபந்தனைகள்

Kogilavani   / 2021 மார்ச் 24 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

நுவரெலியா மாவட்டத்திலுள்ள கோவில்களில் முன்னெடுக்கப்படும் பூஜைகள், உற்சவங்கள், கும்பாபிஷேகம் அனைத்தும், சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என்று, உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள் தொடர்பில் 12 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்று, லிந்துலை பொதுசுகாதாரப் பிரிவின் வைத்திய அதிகாரி கலாநிதி சனத் அபயகோன் தெரிவித்தார்.

பூஜை வழிபாடுகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், வெளிமாவட்டங்களிலிருந்து வரும் எவரும் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

அந்தந்தப் பகுதிகளுக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர்களின் அனுமதியின்றி, பூஜை, உற்சவங்களை நடத்துவதற்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வருடாந்தத் திருவிழாக்களை முடிந்த மட்டில் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X