2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

கேகாலை மாவட்டத்தில் புதிதாக பொலிஸ் நிலையங்களை அமைக்க நடவடிக்கை

Sudharshini   / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

கேகாலை மாவட்டத்தில் புதிதாக மூன்று பொலிஸ் நிலையங்களையும் பாதுகாப்பு சோதனைச் சாவடி ஒன்றையும் அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கேகாலை மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம், மாவட்ட இணைத் தலைவர்களான சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மின்சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிடிய, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஜய பெரேரா ஆகியோர் தலைமையில் சனிக்கிழமை (05) கேகாலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

கேகாலை மாவட்டத்தில் இபுல்கஸ்தெனிய, கலிகமுவ மற்றும் கொடிகமுவ ஆகிய பிரதேசங்களில் மூன்று புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, உல்லாசப் பயணிகள் கூடுதலாக வரும்  பின்னவலை பிரதேசத்தில் பாதுகாப்பு சோதனைச்சாவடி ஒன்று புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்கு பொருத்தமான இடத்தை தெரிவு செய்வது குறித்து நேற்றைய தினம் கலந்துரையாடப்பட்டது.

நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் புதிதாக பொலிஸ் நிலையங்கள் அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .