2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Sudharshini   / 2016 ஜனவரி 20 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய கல்வி நிறுவனத்தின் தலைவரும் இராஜாங்க கல்வி அமைச்சருமான வே.இரதாhகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

'இங்கு விவசாயம், தமிழ் மற்றும்; ஆரம்பக்கல்வி ஆசிரிய பயிலுனர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இக்கல்லூரியில் ஆரம்பத்தில் சமூகக்கல்வி, இந்து கலாசாரம் ஆகிய கற்கைநெறிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சங்கீதம், சித்திரம் ஆகிய பாடநெறிகளுக்கு விரிவுரையாளர்கள் இருக்கின்ற போதும் ஆசிரிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதில்லை.

மேற்படி பாட நெறிகளை தெரிவு செய்யும் ஆசிரியர் மாணவர்கள், யாழ்ப்பாணம், கோப்பாய் ஆகிய ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கே செல்கின்றனர். இந்நிலையில், மீண்டும் மேற்படி பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மலையகத்திலிருந்து தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள ஆசிரியர் உதவியாளர்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, புதிய பயிற்சி நெறிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

இதேவேளை, கட்டட வசதிகள், விரிவுரையாளர்கள் தங்குமிட வசதிகள், ஆசிரிய மாணவர்களுக்கான விடுதி, மைதானம், விவசாயப்பாட செயன்முறை பயிற்சிக்கான தோட்டம், கணினி தொழில்நுட்ப வசதிகள், தளபாட வசதிகள், சுகாதார வசதிகள், குடிநீர் உட்பட அனைத்து உட்டகட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய கல்வி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .