2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காட்டுக்குள் நுழையத் தடை

Kogilavani   / 2017 மார்ச் 09 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்   

நுவரெலியா, சீத்தா-எலிய மற்றும் கந்தப்பளை ஆகிய வனப் பகுதிகளுக்குள், அத்துமீறி உள் நுழைபவர்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென, கந்தப்பளை வன பாதுகாப்பு இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.  

செவ்வாய்க்கிழமை முதல் இதற்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.  

இது தொடர்பில் கந்தப்பளை வன இலாகா அதிகாரிகள் மேலும் கூறியுள்ளதாவது,  

“வன இலாகாவின் தடை உத்தரவையும் மீறி, வனாந்தரங்களுக்குள் நுழைவோருக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தண்டப்பணம் அறவிடப்படும். ஆயுதங்கள் மற்றும் தீ பரப்பும் பொருட்களுடன் உள்நுழைபவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் முதல் 2 இலட்சம் ரூபாய் வரையிலான தண்டப்பணம் அறவிடப்படுவதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு தண்டனையும் பெற்றுக்கொடுக்கப்படும்.  

சீத்தா எலிய மற்றும் கந்தப்பளை ஆகிய வனப்பிரதேசத்தை உள்ளடக்கி, 20க்கும் அதிகமான கிராமங்களும் 13இற்கும் அதிகமான பெருந்தோட்டப்பகுதிகளும் காணப்படுகின்றன. இங்கு வாழ்கின்ற மக்கள், குறித்த வனப்பகுதிகளுக்கு சென்று, குடிநீர் பெருகின்றனர்.  

அதேபோன்று, வன இலாகாவுக்கு அறிவிக்காமல், வனப்பகுதிகளுக்குச் சென்று, விறகுகள் சேகரிக்கின்றனர். இதன்போது காடுகளுக்கு தீ வைத்தல், விலை மதிக்கத்தக்க பச்சை மரக் கன்றுகளை அழித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபவதனால், இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.   
இயற்கை அழிவை தடுப்பதற்காகவே, இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   

விறகு சேகரிக்க, வாரத்தில் ஒருநாள் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வன இலாகா அனுமதிப்பத்திரம் வழங்கும். அவசிய தேவைக் கருதி பொதுமக்களை, ஆயுதங்கள் இன்றி வனத்துக்குள் அனுமதிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X