2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

குடிநீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா       

மனித சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான குடிநீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்த நிறுவனங்களின் பணிப்பாளர்கள் இருவர், கடுமையாக எச்சரிக்கப்பட்டு, தலா முப்பதாயிரம் ரூபாய் என்றடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது.

பொதுமக்களினால் கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையினர் சுகாதாரப் பிரிவினருடன் சென்று, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரை பரிசோதனை செய்திருந்தனர்.

அப் பரிசோதனையின்போது, குறிப்பிட்ட குடிநீரில் கழிவு எண்ணெய் கலக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இக் கழிவு எண்ணெய் மனித சுகாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துமென்று சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பதுளை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 2ஆம் திகதி குடிநீர் போத்தல்களில் அடைக்கும் இரு நிறுவனங்களுக்கெதிராக தொடரப்பட்ட வழக்கில், நிறுவனங்களின் பணிப்பாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதும், நீதிபதி முன்னிலையில், அவ்விருவரும் தம்மீது சுமத்தப்பட்டிருந்த  குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டனர்.

நீதிபதி அப்பணிப்பாளர்களை கடுமையான எச்சரிக்கை செய்து, அவர்களுக்கு தலா 30ஆயிரம் ரூபாய் என்றடிப்படையில் அபராதத்தையும் விதித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .