Kogilavani / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹியங்கனை-தம்பகொல்ல பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் யுவதி, மஹியங்கனை-அலுகெடியாகவ பிரதேசத்திலுள்ள தேயிலை தோட்டத்திலிருந்து இன்று(2) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பிரதேசத்தை சேர்ந்த ரம்யா விதர்ஷனி என்ற 18 வயது யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது சடலம் அரைநிர்வாண கோலத்தில் காணப்பட்டதாகவும் சடலத்துக்கு அருகில் இரண்டு கையடக்கதொலைபேசிகள் மற்றும் பாதணி ஜோடி என்பன காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கெமுனுபுர, ஆடைத் தொழிற்சாலையில் தொழில்புரிந்து வந்த இவர், கடந்த வாரம் காணாமல் போயிருந்ததுடன் இவர் தொடர்பில் அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையிலே அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
26 minute ago
38 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
56 minute ago