Kogilavani / 2016 மே 06 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கேரள கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த இராணுவ வீரர் உட்பட ஐவரை அலவத்துகொடை பொலிஸார் நேற்று(5) கைதுசெய்துள்ளனர்.
அலவத்துகொடை மற்றும் அக்குறணை ஆகிய நகரங்களை அண்மித்த பகுதிகளில் மேற்கொண்ட தேடுதலின் போதே மேற்படி ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அக்குறணை துனுவிலை வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், அதிலிருந்து கேரள கஞ்சாவை கைப்பற்றியதுடன் முச்சக்கரவண்டியிலிருந்த நபரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இவ்வாறு கைதானவர் மூன்று வருடங்களுக்கு முன்பு இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, பல குற்றங்களுக்காக நீதிமன்றத்;தினால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த இருவரையும் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த இருவர் உட்பட ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவ் ஐவரையும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago