Kogilavani / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
புலமைப் பரிசில் பரீட்சை எழுதுவதற்காகச் சென்ற தனது மகனையும் அழைத்துச்சென்ற மகளையும் காணவில்லையென நோர்வூட் வெஞ்சர் தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவர், நோர்வூட் பொலிஸில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளார்.
சிவகுமாரன் மதுசான் (வயது 10), அவரது சகோதரியான சிவக்குமாரன் சிவக்குமாரி (வயது 17) ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடாளாவிய ரீதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் மேற்படி மாணவன் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக தனது சகோதரியுடன் நோர்வூட் தமிழ் வித்தியாலயத்துக்குச் சென்றதாகவும், இருவரும் நேற்று மாலை வரை வீடுத் திரும்பவில்லை எனவும் மேற்படி நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சிறுவர்களின் தாயும் தந்தையும் பிரிந்து வாழ்வதாகவும் தாய் கம்பளை குருந்துவத்தை பிரதேசத்தில் வசித்து வருவதாகவும் இடைக்கிடையில் பிள்ளைகளை வந்து பார்த்துவிட்டுச் செல்லதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியந்துள்ளது.
இதனால், பரிட்சை முடிந்தப் பின்னர், மேற்படி இருவரும் தமது தாயின் வீட்டுக்குச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் நோர்வூட் பொலிஸார், குருந்துவத்தை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
19 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
49 minute ago
1 hours ago