Janu / 2024 ஜூலை 24 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிர்காமம் வள்ளி அம்மா ஆலயத்திற்கு அருகில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்த சந்தேக நபரரை பிடிக்க முற்பட்ட போது, சந்தேக நபர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கையை கத்தியால் வெட்டி தப்பிச் சென்றுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் இடது கை முழங்கை முதல் மணிக்கட்டு வரை வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேகநபர் நாகஹவீதிய பிரதேசத்தை சேர்ந்த 'சுசா பொடியா' என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago