மொஹொமட் ஆஸிக் / 2017 ஜூன் 07 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வெள்ளப்பெருக்கு ஏற்படாத நாடாக, இலங்கையை மாற்றியமைக்க வேண்டுமெனில், பிரதான ஆறுகளுக்கு அருகில் கட்டப்பட்டுள்ள, கட்டப்பட்டு வரும் சட்டவிரோதக் கட்டடங்களை அகற்றுவதற்கு, உரிய தரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்று, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார்.
மத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வு, சபைத் தலைவர் எல்.டி.நிமலசிறி தலைமையில் பல்லேகலையிலுள்ள மாகாண சபைக் கட்டடத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,
'பிரதான நீர்நிலைகளுக்கு அருகில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோதக் கட்டடங்களினாலேயே, நாடு வெள்ளத்தில் மூழ்குகிறது. ஒரு குறிப்பிட்ட பிரதேம் மட்டுமல்ல சட்டவிரோதக் கட்டடங்கள் எங்கு கட்டப்பட்டாலும் அது நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பாதிப்பாக அமைகின்றன.
குறிப்பாக மத்திய மாகாண சபை, இது விடயமாக மிகுந்த கவனம் வெலுத்தவேண்டும். அல்லாத பட்சத்தில் நுவரெலிய மாவட்டம் மட்டுமல்ல கண்டி மாவட்டத்திலும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அனர்த்தங்களை நாம் எதிர்கொள் நேரிடும்.
மகாவலி கங்கை, மகாவலிக்கு நீர் வழங்கும் கிளை ஆறுகளைக் கொண்ட அம்தென்னை, உடுநுவர ஆகியப் பிரதேசங்களில் சட்டவிரோதக் கட்டடங்கள் அதிகமாகக் கட்டப்பட்டுள்ளன. காலப்போக்கில் நீர் வழிந்தோட ஒதுக்குநிலம் இன்றி, இப்பகுதிகள் பாரிய வெள்ளத்தில் மூழ்கும்' என்று அவர் மேலும் கூறினார்.
“இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு வழங்கும் நிவாரண உதவிகளை, இலத்திரனியல் ஊடகங்கள், பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த தவறுகின்றன. இதனால், மக்கள் அரசை, சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றனர்.
ஊடகங்கள் தமது நிறுவனத்தால் வழங்கப்படும் நிவாரண உதவிகளையே, பெரிதுப்படுத்திக் காட்டுகின்றன. வெளிநாடுகளில் இருந்துக் கிடைக்கும் உதவிகளை அரசு மக்களுக்கு வழங்கினாலும் கூட அதனை ஊடகங்கள் காட்சிப்படுத்துவதில்லை.
இதனால், ஊடக நிறுவனங்கள் மட்டுமே உதவிகளை செய்கின்றன என்று கேட்கும் அளவுக்கு, ஒளி,ஒலி ஊடகங்கள் ஒருதலைபட்சமான செய்திகளை காட்சிப்படுத்துகின்றன. இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக தொலைக்காட்சிகளில் காட்டப்படும் செய்திகள் ஒருதலைப்பட்சமாக இருக்கின்றன. அரசு மேற்கொள்ளும் நலன்புரிவிடயங்கள் எல்லைப்படுத்தப்பட்டு, தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் நலன்புரி நடவடிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நடவடிக்கை, அரசை அபகீர்த்திக்கு உள்ளாக்கி வருகின்றது. வெளிநாடுகளில் இருந்து பெறுமளவு உதவிகள் கிடைத்தும் அதனை அரசு வழங்குவதில்லையா என? பாமரமக்கள் கேட்கும் அளவு, நிவாரணம் பற்றிய விடயங்கள் விகாரமாக்கப்பட்டு வருகின்றன” என்று அவர் மேலும் கூறினார்.
16 minute ago
25 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
55 minute ago
1 hours ago