Kogilavani / 2021 மார்ச் 19 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் ஓயாவுக்குச் செல்லும் கிளை ஆற்றில், சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேரை வட்டவளை பொலிஸார், நேற்று (19) இரவு கைதுசெய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்படி இடத்துக்குச் சென்றபோதே, பொலிஸார் மேற்படி 9 பேரையும் கைதுசெய்துள்ளதுடன் மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்தியப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
ஹட்டன், நோர்வுட், பொகவந்தலாவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறத்த 9 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 28ஆம் திகதி அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.


21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026