Sudharshini / 2016 ஜனவரி 25 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா
பெருந்தோட்டப் பகுதிகளில், கூட்டுறவு சமுக நலன்புரி நிலையங்கள் இயங்கும் பட்சத்தில், அரசாங்கம் நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் திறமான சுத்தமான அத்தியவசியப்பொருட்களை இலகுவான முறையில் கொள்வனவு செய்யக்கூடிய நிலைமை உருவாகும். அத்துடன், அத்தியாவசிய பொருட்களின் எடைகளும் முறையாகவும் கிரமமாகவும் அமையும் என ஊவாமாகாண கூட்டுறவு துறை அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
பதுளை, கிலனூர் மற்றும் ஹப்புத்தளை ஆகிய தோட்டப்பகுதிகளில் கூட்டுறவு சமுக நிலையங்களை இன்று (25) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நாட்டின்; கடின உழைப்பாளர்களாக இருந்து வருபவர்கள் பெருந்தோட்ட தொழிலார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதேவேளை, தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியமின்மை, அவர்களின் வாழ்வாதாரங்களை மேற்கொள்ள பெருந்தடையாக இருந்து வருகின்றது' என்றார்.
'இவ்வாறானதொரு நிலையில், கிடைக்கும் சொற்ப ஊதியத்தில் இலகுவாகவும் மலிவாகவும் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுகொள்ளக் கூடியதாக கூட்டுறவு சமுக நலன்புரி நிலையங்கள் அமைந்திருப்பது விஷேட அம்சமாகும்' என்று அவர் மேலும் கூறினார்.


37 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
41 minute ago
1 hours ago