Niroshini / 2016 ஜூன் 04 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நாடாளுமன்றத்துக்கு உள்வாங்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் அவசியத்தேவையாகும் என இ.தொ.கா.வின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னாள் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டி.வி. சென்னன் தெரிவித்துள்ளார்.
இத தொடர்பில் அவர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பன்டாரநாயக்க குமாரதுங்க நேர்மைமிக்க, இன, மத பேதமற்ற தலைவியாவார். அவர் குடும்ப உறவுகளுக்கு அப்பாற்பட்டு, மக்களுக்கு சேவையாற்றக்கூடிய உத்தமாராவார்.
நாட்டின் சுகாதார அமைச்சைப்பொறுத்தவரை ஆரம்பம் முதல் தொடர்ந்தும் பிரச்சினைக்குரிய, இழுபறி நிலைக்குரிய அமைச்சாக இருந்து வருகின்றது. சுகாதார அமைச்சினை எதிர்த்து காலத்துக்கு காலம் ஏதாவது ஒரு பிரச்சினையினை முன்னிலைப்படுத்தி, வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்புகளை மேற்கொண்டுவருகின்றனர். இதனால். நாடளாவியரீதியல் அப்பாவி நோயாளர்கள் பெரும் பாதிப்புகளை எதிர் கொண்டு வருகின்றனர்.
எனவே, அவ் அமைச்சின் பொறுப்புகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பன்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்குவது உசிதமாகுமென்று நாம் கருதுகின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
16 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
4 hours ago
4 hours ago