Editorial / 2025 ஏப்ரல் 25 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
கண்டி மாவட்டத்தில் பன்வில பிரதேசத்தில், மனித உரிமை ஆணைக்குழு மனித அபிவிருத்தி தாபனத்துடன் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை பன்விலை இராஜசிங்க மத்திய மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை(26) காலை 9.00 மணி தொடக்கம் 3.00 மணி வரை இடம்பெறும்.
அன்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளர்,ஏனைய அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து கொள்வர்.
பொது மக்களிதன் அடிப்படை மனித உரிமை மீறல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்வதுடன், அடிப்படை ஆவணங்கள் ( பிறப்பு, இறப்பு, விவாக சான்றிதழ்கள்) தேசிய அடையாள அட்டை, ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பான பிரச்சினைகள், பொதுப் பிரச்சினைகள் தொடர்பான சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
பன்வில பிரதேசத்தில் பல்வேறு அடிப்படை ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகளை எதிர் நோக்கும் பொது மக்கள், இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago