2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சப்ரகமுவ பகிடிவதை: மேலுமிருவர் கைது

Editorial   / 2025 மே 06 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளான நிலையில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த  23 வயதுடைய மாணவன், ஏப்ரல் 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு மாணவர்கள் குற்றப் புலுனாய்வு திணைக்கள அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X