Kogilavani / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் உட்பட மாகாணத்தில் வாழும் மக்களுக்கு, யோகாசன பயிற்சிகளை வழங்குவதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவது குறித்து கலந்துரையாடல் ஒன்று நேற்று(4) சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
சப்ரகமுவ மாகாண பாடசாலை ஆசிரியர்களுக்கு யோகாசன பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் அவர்களுக்கூடாக மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. யோகாசன பயிற்சிகளை யோகா குருஜீ ஜயகுமார் ஆசிரியர்களுக்கு பயிற்றுவிக்கவுள்ளார்.
இதனடிப்படையில் சப்ரகமுவ மாகாணத்தில் 200 ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக மூன்று மாத காலத்துக்கு யோகாசன பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கு மேலதிகமாக சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அரச அலுவலகங்கள் மற்றும் இளைஞர், யுவதிகளுக்கு யோகாசன பயிற்சிகளை பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் வழங்குவதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.
39 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
1 hours ago