2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

சரணாலயங்களிலுள்ள யானைகளுக்கு பார்வை குறைபாடு

Kogilavani   / 2021 மார்ச் 23 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

சரணாலயங்கள் மற்றும் வனப்பகுதிகளிலுள்ள அநேகமான யானைகளுக்கு, கண் பார்வை குறைபாடு இருப்பதாக, உடவளவை சரணாலய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் ஜீவகாருண்ய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாகவே யானைகள் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றன என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அத்துடன் பல யானைகள் பாரிய குழிகளில் விழுந்து மரணிக்கின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொடை கல்தோட்டைப் பகுதியில் தந்தங்களுடன் மரங்களுக்குள் சிக்கிய யானை ஒன்றை, அதிகாரிகள் மரங்களை வெட்டி அகற்றி  காப்பாற்றியுள்ளனர்.

மனித செயற்பாடுகளே, யானைகளின் கண்பார்வை குறைபாடுக்குக் காரணமாகியுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றன. யானைகளின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்பவர்கள் அவற்றின் கண்களை இலக்கு வைப்பதால், பார்வையை இழக்கும் யானைகள், எதிர்பாராத விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X