2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சிறுமி பாலியல் வன்கொடுமை ; சிறிய தந்தை சிக்கினார்

Janu   / 2025 ஜூலை 08 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனமல்வில,பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுலே ஆர பிரதேசத்தைச் சேர்ந்த  10 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் சித்தப்பா திங்கட்கிழமை (07) அன்று தனமல்வில பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் பாடசாலைகளுக்கு  விநியோகிக்கப்பட்டுள்ள முறைப்பாடு   பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கடிதமொன்றை, வகுப்பு ஆசிரியரொருவர் வாசித்தன் மூலம் இது தொடர்பாக தெரியவந்துள்ளதுடன், ஆசிரியர் பொலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளார்.

அதற்கமைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறுமி தனது பாட்டியின் வீட்டில் வைத்து பல சந்தர்ப்பங்களில் சந்தேக நபரான 24 வயதுடைய திருமணமான இளைஞனால் கடுமையாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியமை தெரியவந்துள்ளது.   

சந்தேக நபர் கைது செய்யப்பட்டு  வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சிறுமி வைத்திய பரிசோதனைக்காக தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமனசிறி குணதிலக்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .