Editorial / 2021 ஒக்டோபர் 18 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்கரனோயா தோட்டத்தில் (16) வயதுடைய சிறுவன் ஒருவரை இராகலை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
அல்கரனோயா தோட்டத்தில் வசிக்கும் இச் சிறுவன் தனது பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஐந்து வயதுடைய சிறுமியின் அந்தரங்க உறுப்பை நகரங்களால் கீறி காயப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பில், தன்னுடைய பெற்றோருக்கு தெரிவிக்கவே, இராகலை பொலிஸில் சிறுமியின் பெற்றோர் முறையிட்டுள்ளனர். அதன்பின்னர், பொலிஸாரின் உதவியுடன் அச்சிறுமி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அதன்பின்னர் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு கைது செய்யப்பட்ட சிறுவனிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், அச்சிறுவனை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .