Editorial / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரசாத் ருக்மால்
எல்ல சுற்றுலாத் தகவல் மய்யத்தின் அதிகாரி மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தலைமறைவாகியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட எல்ல பிரதேச சபையின் தவிசாளர் பீ.எம்.அமில பஸ்நாயக்கவை, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்லுமாறு, பண்டாரவளை பதில் நீதவான் ருவான் பஸ்நாயக்க, நேற்று (10) உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையும் பொலிஸ் நிலையத்துக்கு வந்து கையொப்பமிட வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளதுடன், இவ்வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்படித் தவிசாளர், எல்ல பொலிஸ் நிலையத்தில் நேற்று (10) காலை ஆஜராகியதன் பின்னர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
எல்ல சுற்றுலாத் தகவல் மையத்துக்கு சென்றிருந்த மேற்படி உறுப்பினர், தகவல் மையத்தின் அதிகாரியிடம், அந்நிலையத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள விடுதியின் சாவியைக் கேட்டுள்ளார். சாவியை வழங்க அதிகாரி மறுத்ததால், குறித்த உறுப்பினர் மீதுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளாரென்றும் தெரிய வருகிறது.
இச்சம்பவத்தில் காயமடைந்த அதிகாரி, பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடுக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்ட வந்த பொலிஸார், பொலிஸில் ஆஜரான தவிசாளரை நேற்று(10) கைதுசெய்து நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
37 minute ago
48 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
48 minute ago
55 minute ago
1 hours ago