Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிராமிய வயோதிபர் , நகரின் சிகை அலங்கரிப்பு நிலையமொன்றுக்கு சென்று, தனது சிகை அலங்கரிப்பினை நிறைவு செய்துவிட்டு, அதற்கு கூலியாக பலாக்காய் ஒன்றையும், எலுமிச்சைப்பழங்கள் சிலவற்றையும் வழங்கிய சம்பவம், பதுளை நகரில் இன்று வியாழக்கிழமை(19) இடம்பெற்றுள்ளது.
பதுளை நகரின் சிகை அலங்கார நிலையம் திறந்ததும், பொதியொன்றை சுமந்து வந்த வயோதிபர், தமது தலைமுடியை வெட்ட வேண்டுமென்று கூறியதும், நிலைய உரிமையாளர், அந்நபரை ஆசனத்தில் அமரும்படி கூறினார்.
அதையடுத்து, தலைமுடி திருத்தப்பட்டதும் அவ்வயோதிபர், தாம் கொண்டு வந்த பொதியிலிருந்து பலாக்காய் ஒன்றையும் எலுமிச்சைப்பழம் சிலவற்றையும் தலைமுடி வெட்டியவரிடம் கூலியாகக் கொடுத்தார்.
மேலும், குறித்த வயோதிபர், அடுத்தமுறை தலைமுடி திருத்த வரும்போது, வாழைக்காய்களும் வாழைப்பொத்தி (பூ) கொண்டு வந்து தருவதாகக்கூறிவிட்டு, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
5 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
13 Apr 2026