Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 29, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்திழுக்கின்ற ஓர் இடமாக சிகிரியா விளங்குகின்றது. சிகிரியாவுக்கு வருகை தரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் செதுக்கல்கள் பதியப்பட்டுள்ள கற்களின் மீது ஏறி நிற்றல் மற்றும் நடத்தல் தொடர்பிலான செயற்பாட்டினால் சிற்பங்களில் சிதைவுகள் ஏற்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
நாளொன்றுக்கு சுமார் 5,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் சிகிரியாவுக்கு வருகை தருகின்றனர். பழமையான சிற்பங்களை பேணிப் பாதுகாக்குமாறு அறிவுறுத்தல்கள் அடங்கிய அறிவுத்தல் பலகைகள், மும்மொழிகளிலும் வைக்கப்பட்டிருக்கின்றன.
எனினும், சுற்றுலாப்பயணிகளில் பெரும்பாலானவர்கள் அதனைப் பின்பற்றுவதல்லை என மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சிகிரியாக் காரியாலயத்தில் 350 ஊழியர்கள் பணியாற்றுவதுடன், சிகிரியாவைப் பார்வையிடுவதற்காக வெளியூர் பயணிகளிடம் 4,260 ரூபாயும், உள்நாட்டவர்களிடம் 60 ரூபாயும் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
16 minute ago
27 minute ago