2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சிகிரியாவில் குளவிக் கொட்டு; 23 பேர் பாதிப்பு

Princiya Dixci   / 2016 மே 02 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிகிரியாக் குன்றைப் பார்வையிடுவதற்காகச் சென்ற சுற்றுலாப் பயணிகளில் 23 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி கிம்புஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) மதியம் 02 மணியளவில் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட 13 ஆண்கள், 06 மூதாட்டிகள் மற்றும் 03 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இவர்களில் இருவர், மேலதிக சிகிச்சைக்கென தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .