Kogilavani / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் நோர்வூட்டில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் போது சிறுவர்களுக்காக வழங்கப்பட்ட சொக்லேட்டில் புழுக்கள் இருந்ததாக பொகவந்தலாவை பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த அமைப்புக்குழு முறைபாடு செய்துள்ளது.
நிகழ்வில் கலந்துகொண்ட சிறுவர்களுக்கு வழங்குவதற்காக ஹட்டன் நகரப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் அதிகமாக சொக்லேட் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இந்த சொக்லேட்களை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் போது அவற்றில் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் சம்பந்தப்பட்ட கடையை சோதனை செய்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கடையில் இருந்த ஏனைய சொக்லேட்களை கைப்பற்றியதோடு மேற்படி சொக்லேட் கம்பனி நிர்வாகத்துக்கும், கடை உரிமையாளர்களுக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.
இதேவேளை, ஹட்டன் நகரில் திங்கட்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு எதிராக சுமார் 20 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago