Sudharshini / 2016 மே 10 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று (10) மீட்கப்பட்டுள்ளது.
இன்று (10) காலை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், சிறுத்தைக் குட்டியொன்று தேயிலைச் செடிக்குள் பதுங்கி இருப்பதைக் கண்டுள்ளனர். இதனையடுத்து, தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து சிறுத்தைக் குட்டியை பிடித்துள்ளனர்.
தோட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அக்கரப்பத்தனை பொலிஸாருக்கும் இது குறித்த தகவல் வழங்கியுள்ளனர்.
சிறுத்தைக் குட்டியை சம்மந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்காவிடின் மீண்டும் வனப்பகுதியில் சிறுத்தைக் குட்டியை விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago